தமிழகத்தில் கல்லூரிகள் இன்று முதல் காலவரையின்றி மூடல்.. தலைமை செயலாளர் உத்தரவு



தமிழகத்தில் பள்ளிகளை தொடர்ந்து கல்லூரிகளும் உடனடியாக மூடப்படுவதாக தமிழக அரசின் தலைமை செயலாளர் அறிக்கை வெளியிட்டுள்ளார்

இது தொடர்பாக தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் வெளியிட்ட அறிக்கையில், முன்னதாக தமிழ்நாட்டில் கொரோனா தொற்று குறைந்து வருவதை கருத்தில் கொண்டு ம பல்கலைக்கழகங்கள் கல்லூரிகளில் இறுதி ஆண்டு வகுப்புகள் இயங்க கடந்த டிசம்பர் 7ம் தேதி முதல் அனுமதி அளிக்கப்பட்டது. இதேபோல் பிப்ரவரி 8ம் தேதி இளங்கலை முதுகலைப்படிப்பு முதலாம் ஆண்டு இரண்டாம் என அனைத்து அனைத்து வகுப்புகளும் இயங்க அனுமதி அளிக்கப்ட்டது.

ஆனால் தமிழகத்தில் தற்போது கொரோனா பரவல் அதிகரிப்பதை கருத்தில் கொணடு 23.03.2021(இன்று) முதல் கல்லூரிகள் மூடப்படுகிறது. அதேநேரம் உயர்கல்வித்துறையின் கீழ் இயங்ககும் அனைத்து கல்விநிறுவனங்களும் மற்றும் நிகர்நிலை பல்கலைக்கழகங்களிலும் இணையவழியில் வாரத்தில் ஆறுநாட்கள் வகுப்புகள் நடைபெறும். செமஸ்டர் தேர்வுகளும் இணையவழியில் நடைபெறும் என்று கூறியுள்ளார்.



Post a Comment