தமிழகத்தில் டிசம்பர் 7ஆம் தேதி முதல் உயர்கல்வி நிறுவனங்கள் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது அதற்கான வழிகாட்டி நெறிமுறைகளை தற்பொழுது வெளியிட்டுள்ளது.
அதில் கல்லூரிக்கு வரும் இறுதி ஆண்டு மாணவர்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும், சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்பட வேண்டும், வாரத்தில் 6 நாட்கள் கல்லூரிகள் இயங்க வேண்டும். கொரோனா தொற்று அறிகுறிகள் உள்ள மாணவர்களுக்கு அனுமதி இல்லை. கல்லூரி விடுதியில் ஓர் அறையில் ஒரு மாணவருக்கு மட்டும் தங்க அனுமதி என தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் உள்ளது

Post a Comment
Post a Comment